உள்ளூர் செய்திகள்

நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-08-17 12:46 IST   |   Update On 2023-08-17 12:46:00 IST
  • கருப்பட்டங்குறிச்சியில் புதிய நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிக்கு ஆளாவாதாக வேதனை தெரிவிக்கின்றனர்

அகரம்சீகூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.

அகரம்சீகூர் ஊராட்சியில் திட்டக்குடி பார்டர், வயலூர் கருப்பட்டங்குறிச்சி கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் கருப்பட்டங்குறிச்சியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் இங்குள்ள மக்கள் சுமார் 60- வருடங்களாக வயலூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

கருபட்டங்குறிச்சியில் இருந்து வயலூரில் அமைந்துள்ள ரேசன் கடைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் எனவே கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை புதிய நியாய விலை கடை அமைக்கப்படவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கருப்பட்டங்குறிச்சி பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News