உள்ளூர் செய்திகள்
தபால் துறையில் மகளிர் மதிப்பு திட்ட பயனாளிகளுக்கு பரிசு
- தபால் துறையில் மகளிர் மதிப்பு திட்ட பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
பெரம்பலூர்,
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைத்து அஞ்சலகங்களிலும் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் மற்றும் 50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்த வாடிக்கையாளர்களில் 15 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி, பூலாம்பாடியை சேர்ந்த சீதாலட்சுமி, நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.