உள்ளூர் செய்திகள்

தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்...

Published On 2023-02-13 15:03 IST   |   Update On 2023-02-13 15:03:00 IST
தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ் வழி கல்வி இயக்ககம் வலியுறுத்தியது

பெரம்பலூர்:

தமிழ் வழியில் படித்தோ ருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென தமிழ்வழிக் கல்வி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.பெரம்பலூர் பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் தமிழறிஞர்கள் இளங்குமரனார், பாவாணர் ஆகியோரின் பிறந்த நாள், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, இயக்கச் செயலாளர் தேனரசன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் தம்புசாமி, தமிழ் வழிக்கல்வி இயக்க மாநிலத் தலைவர் சின்னப்பதமிழர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாவட்டம் தோறும் தமிழ் மருத்துவக் கல்வி கல்லூரி நிறுவ வேண்டும். மத்திய, மாநில அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மழலைக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆய்வுக் கல்வி வரை தமிழ்வழியில் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு சாதி மறுப்பாளர் எனச் சான்று வழங்கி உடனே அரசுப்பணி வழங்கவும், அவர்களுடைய குழந்தைகளுக்குச் சாதிய ற்றவர் என்று சான்று வழங்க வேண்டும்போட்டி தேர்வுகள் அனைத்தையும் தமிழ் மொழியில்நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.இக்கூட்டத்தில், நிர்வாகிகள் செம்பியன், முகுந்தன், செங்கோலன், அண்ணாதுரை, பேராசி ரியர் செல்வக்குமார், தங்க ராசு, காப்பியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News