உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம்

Published On 2022-06-14 15:30 IST   |   Update On 2022-06-14 15:30:00 IST
  • பல்வேறு தரப்பு குற்றசாட்டால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • பெரம்பலூரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.குமரிமன்னனை ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும்,

நெல்லை மாவட்டம் அம்பை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.பார்கவியை பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும் கடந்த மே மாதம் 19-ந்தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து குமரிமன்னன் கடந்த 31-ந்தேதி பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பணியில் இருந்து விடுவித்து சென்றார். இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பார்கவி பொறுப்பேற்காமல் இருந்தார்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பார்கவியை தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பொறியாளர் மனோகர் கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். குமரிமன்னனும் வாலாஜபேட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரம்பலூரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று பிற்பகலில் பெரம்பலூர் வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டார்.

மேலும் பணியிடை நீக்க காலத்தில் குமரி மன்னன் பெரம்பலூரிலேயே தங்கியிருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் குமரிமன்னன் பெரம்பலூரை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News