உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் ஓ.பி.எஸ். அணி - அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-02 13:39 IST   |   Update On 2023-08-02 13:39:00 IST
  • பெரம்பலூரில் ஓ.பி.எஸ். அணி - அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி கோஷம்

பெரம்பலூர்,

பெரம்பலூரில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரம்பலூர் காந்தி சிலைக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓபிஎஸ் அணியின் மாநில ஜெ. பேரவை செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.இதில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சின்னராஜேந்திரன், முகமது இக்பால், சிவக்குமார், பெருமாள், ஜெயக்குமார், மோகன், வீரமுத்து, கலைவாணன், முத்துசாமி, இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News