உள்ளூர் செய்திகள்

ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமனம்

Published On 2022-11-08 15:05 IST   |   Update On 2022-11-08 15:05:00 IST
  • ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்
  • வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோரை சந்தித்து ஜெயசீலன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூரில் உள்ள காந்தி, அம்பேத்கார் ஆகியோரது உருவ சிலைக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் செல்ல கதிர்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணை தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாரும், பேரூராட்சி கவுன்சிலருமான ரபியுதீன், ஆசிரியர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News