உள்ளூர் செய்திகள்

தொழில் தொடங்க 25 நபர்களுக்கு ரூ.86 லட்சம் கடனுதவி

Published On 2022-09-29 09:36 GMT   |   Update On 2022-09-29 09:36 GMT
  • தொழில் தொடங்க 25 நபர்களுக்கு ரூ.86 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது
  • வங்கி மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிளலான வங்கி மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் துறை சார்ந்த திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படும் திட்டங்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது. பின்னர் இதில் தொழில் துவங்குவதற்காக 25 பேருக்கு ரூ . 86 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஐஓபி முதன்மை மண்டல மேலாளர் சங்கீதா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரன், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி, மகளிர் திட்ட இயக்குநர் ராஜ்மோகன், வேளாண் துணை இயக்குநர் சிங்காரம், நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன் மற்றும் வங்கி மேலாளர்கள் பலர் கலந்து கொண்னடர்.

Tags:    

Similar News