உள்ளூர் செய்திகள்

பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-25 14:09 IST   |   Update On 2023-07-25 14:09:00 IST
  • பெரம்பலூரில் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • அம்பேத்கர் படத்துடன் கோஷங்களை எழுப்பினர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் மற்றும் பிற வக்கீல்களும் நேற்று காலை பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள், தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் திருவள்ளுவர், காந்தி உருவப்படங்களை மட்டும் வைக்க வேண்டும், மற்ற படங்களை வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் உருவப்படத்தை நீதிமன்றத்தில் இருந்து எடுக்கக்கூடாது, அதனையும் வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News