உள்ளூர் செய்திகள்

நில அளவையர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-12 14:55 IST   |   Update On 2023-08-12 14:55:00 IST
  • பெரம்பலூரில் நில அளவையர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • நில அளவையரை காலணியால் அடித்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய கோரிக்கை

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவை புல உதவியாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டதிற்கு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் உமாசந்திரன், நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பரசன், நில அளவை புல உதவியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில் நில அளவையர் மகேஸ்வரனை தகாத வார்த்தையால் திட்டி, காலணியால் அடித்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சீத்தாபதியை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், நில அளவையர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பாரதிவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.

Tags:    

Similar News