உள்ளூர் செய்திகள்

நிலம் தொடர்பான மனு விசாரணை முகாம்

Published On 2023-07-21 12:38 IST   |   Update On 2023-07-21 12:38:00 IST
  • நிலம் தொடர்பான மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
  • 13 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர். முகாமில் 13 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News