உள்ளூர் செய்திகள்
புதிதாக விடுதி தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
- புதிதாக விடுதி தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
பெரம்பலூா்:
பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக தொடங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகளுக்கான விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கருத்துருக்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அல்லது 88388 72443, 75020 34646 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.