உள்ளூர் செய்திகள்

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது

Published On 2023-08-11 11:26 IST   |   Update On 2023-08-11 11:26:00 IST
  • பெரம்பலூரில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான குறைதீர்க்கும் முகாம்
  • உடனடி தீர்வு காண கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், நாளை 12-ந்தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் வட்டம், அரணாரை (தெ) கிராமத்தில் நிறைமதி, வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில், மணிகண்டன் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தலைமையிலும், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் சு.சத்திய பால கங்காதரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில், த.மஞ்சுளா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News