உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் வருகிற 2ம்தேதி கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்

Published On 2022-09-25 13:53 IST   |   Update On 2022-09-25 13:53:00 IST
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் வரும் 2ம்தேதி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.
  • கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும்

பெரம்பலூர் :

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் வரும் 2ம்தேதி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மக்கள் பிரநிதிதிகள் கலந்துகொண்டு கிராம மக்கள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.

அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News