உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் கழக வாயிற்கூட்டம்

Published On 2023-04-18 12:39 IST   |   Update On 2023-04-18 12:39:00 IST
  • பெரம்பலூர் சாரதா தேவி பள்ளியில் நடைபெற்றது
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை

பெரம்பலூர்,

பெரம்பலூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையமான ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேலன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிவாசகன் கலந்துகொண்டு பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்தவேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத்தொகை நிறுத்தி வைத்ததை மீண்டும் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக மீண்டும் வழங்கவேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றி ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜனகிராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News