உள்ளூர் செய்திகள்

மஞ்சள் சாகுபடியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

Published On 2023-01-03 06:31 GMT   |   Update On 2023-01-03 06:31 GMT
  • மஞ்சள் சாகுபடியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
  • பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை

பெரம்பலூர் :

மஞ்சள் சாகுபடி மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மஞ்சளில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சமையலுக்கு பயன்படுத்துகின்ற மஞ்சளை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் மஞ்சளுக்கு தற்போது போதிய விலை இல்லாததால், அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மஞ்சள் குலை விற்பனை மேலும் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி, பெண்கள் பொங்கல் இடுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குலையாவது நல்ல விலைக்கு விற்பனை ஆகுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


Tags:    

Similar News