உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2023-03-03 11:28 IST   |   Update On 2023-03-03 11:28:00 IST
  • பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும்திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 2022 ஜூன் மாதம் 24ம்தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற வரும் ஜூன் மாதம் 30ம்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இவை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்தி க்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News