உள்ளூர் செய்திகள்

எறையூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2023-08-11 11:14 IST   |   Update On 2023-08-11 11:14:00 IST
  • தமிழக அரசை வலியுறுத்தி எறையூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்
  • அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள்சர்க்கரை ஆலை முன்பு அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் இரட்டை ஊதிய முறையை மாற்றி அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடவும், தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட கோரியும் கோஷங்களை எழுப்பினர் உண்ணா விரதத்தில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் உலகநாதன், பாட்டாளி மக்கள் தலைவர் செல்வராஜ், செயலாளர் பார்த்திபன், கரும்பு உதவியாளர் சங்கத் தலைவர் கனகராஜ், செயலாளர் பொன்னுசாமி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சர்க்கரை பிரிவு மாநில செயலாளர் திருஞானசம்பந்தம் உட்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News