உள்ளூர் செய்திகள்
முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- தாய் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் கீழ வீதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 62). இவர் 8 வயதுடைய 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.