உள்ளூர் செய்திகள்
எழுமூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது.
- மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதில், விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் எழுமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதியை கண்டதோடு, அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். முன்னதாக மதியம் பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. பாதுகாப்பு பணியில் மங்களமேடு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.