உள்ளூர் செய்திகள்

மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-26 14:26 IST   |   Update On 2023-07-26 14:26:00 IST
  • பெரம்பலூரில் மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தையும், அதே நாளில் பழங்குடியினர் இன பெண்கள் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், அவற்றை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News