உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைவாக வழங்க கோரிக்கை

Published On 2022-11-14 14:32 IST   |   Update On 2022-11-14 15:07:00 IST
  • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைவாக வழங்க கோரிக்கை விடுத்தனர்
  • பெரம்பலூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு

பெரம்பலூர்:

பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயராமன், முத்துசாமி, மகாலெட்சுமி, ராஜாங்கம், தனராஜ், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கட்டுப்பாட்டக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக சுமைத்தூக்கும் பணியாளர்களை நிரந்தரம் செய்து தொகுப்பூதியம் நிர்ணயம் செய்யவேண்டும் , திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, குறைந்த பட்ச கூலி ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடும்ப உதவிதொகை மற்றும் ஓய்வூதியத்தை காலதாமதம் செய்யாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

நடப்பாண்டில் பாதிக்கப்பட்டுள்ள மானா வாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு தொகையை விரைவாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News