உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் கார் மோதி பசு மாடு பலி

Update: 2022-08-15 09:08 GMT
  • ரெங்கராஜ்பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது.


பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 65). விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.

இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News