உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2022-10-30 15:19 IST   |   Update On 2022-10-30 15:19:00 IST
  • பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
  • முகாமில் தொடக்க நிகழ்ச்சியாக அய்யனார் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது.

முகாமிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ஆண்டாள் குடியரசு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்துமதி தர்மராஜன் முன்னாள் ஆசிரியர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முகாமில் தொடக்க நிகழ்ச்சியாக அய்யனார் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அகரம்சீகூர் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் உள்ள புல், பூண்டு செடி கொடிகள் அகற்றப்பட்டன.

அதன் பின் கழிவு நீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டன. மாலையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் நாகராஜன் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News