உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று வந்த அரசு பள்ளி மாணவர், ஆசிரியர்களுக்கு பாராட்டு

Published On 2022-07-07 15:53 IST   |   Update On 2022-07-07 15:53:00 IST
  • இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று வந்த அரசு பள்ளி மாணவர், ஆசிரியர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.
  • முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்தினர்

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சிகுரு கோ- லேப் நிறுவனத்தின் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் கல்வி பெருவாரியாக போய் சேராத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான குறிப்பாக அறிவியல் ரீதியான விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கல்வி மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை லெட்சுமி தலைமையில் அப்பள்ளி 8ம்வகுப்பு மாணவி அபிதா, தீபிகா மற்றும் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரணவிகா, மாணவன் திருக்குமரன் ஆகியோர் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் உள்ள இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.அங்கு 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வானிலை ஆய்வுக்காக ராக்கெட் ஏவப்படுவதை கண்டு கழித்தனர். மேலும் விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு விண்வெளி பயணங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.சுற்றுலா சென்று வந்த ஆசிரியை லட்சுமி மற்றும் மாணவ, மாணவிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டி வாழ்த்தினார். மேலும் நிகழ்ச்சியின்போது வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.




Tags:    

Similar News