உள்ளூர் செய்திகள்

சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-27 15:42 IST   |   Update On 2022-07-27 15:42:00 IST
  • சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
  • கரகாட்டம் ஒயிலாட்டம் மூலம் நிகழ்ச்சிகள் நடந்தது

பெரம்பலூர்:

75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருச்சி டோல்கேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் சத்யன் பரதாலயா கல்ச்சுரல்ஸ் ஆகியோரும் இணைந்து சாலைப்போக்குவரத்து விதிகளைப் பற்றி திருமாந்துறை சுங்கச்சாவடியில் கரகாட்டம் ஒயிலாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் சாலை பயனாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக நரசிம்மன் பிராஜக்ட் டைரக்டர் திருச்சி, மற்றும் டிடிபி எல் சார்பில் கருணாகரன் ப்ராஜெக்ட் மேனேஜர் மற்றும் அலுவலர்கள் சிவசங்கரன், ரகுநாத், சீனிவாசன், பாஸ்கர், மகேந்திரன், மனோஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News