பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது
- பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போனில் தொடர்பு கொண்டு வற்புறுத்தியுள்ளார்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மகன் ராஜேஷ். இவர் பெரம்பலூரில் தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு படிக்கும் மாணவியை போனில் தொடர்பு கொண்டு தன்னை காதலிக்க வேண்டும் என ஏற்கனவே வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி மாணவியை போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பள்ளி மாணவி பள்ளிக்கு சென்றபோது அங்கு தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தனது மகளை சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்குபதிந்து மாணவியை காதலிக்க கூறி வற்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.