உள்ளூர் செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
- லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
- 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர்- ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் உள்ளே புகுந்து அலுவலக கதவினை உட்புறமாக தாழிட்டு கொண்டு சோதனை செய்தனர். அப்போது பணியிலிருந்த துணை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 11மணி வரையிலும் நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து டிஎஸ்பி சத்தியராஜ் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையால் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.