உள்ளூர் செய்திகள்

சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் ஏறி விபத்துக்குள்ளான கார்

Published On 2023-08-01 13:46 IST   |   Update On 2023-08-01 13:46:00 IST
  • சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் ஏறி கார் விபத்துக்குள்ளானது
  • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கொடும்பப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 24). இவர்  சென்னையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை கொடும்பப்பட்டியை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன் (32) என்பவர் ஓட்டினார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்புக்கம்பியில் மோதி, அதன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News