உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற தடகள மாணவர்கள் 59 பேர் தேர்வு

Published On 2023-04-16 10:29 IST   |   Update On 2023-04-16 10:29:00 IST
  • பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற தடகள மாணவர்கள் 59 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.

பெரம்பலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டியினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.

இதில் பயிற்சியாளர்கள் துர்கா (தடகளம்), பரணி (டேக்வாண்டோ), உடற்கல்வி ஆசிரியர்கள், தற்காலிக பயிற்சியாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 100க் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு 11 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.


Tags:    

Similar News