தொழிலாளர்களுக்கு ஓர் ஆண்டில் ரூ.400 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- தலைவர் பொன்.குமார் தகவல்
- ஆகஸ்ட் மாதம் மாநில தேர்தல் பொதுக்குழு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நடக்க உள்ளது.
- எங்கள் துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், எந்த நலத்திட்ட உதவிகளும் உயர்த்தப்படவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன்குமார் இளைஞர் அணி சார்பில், கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை.மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆஞ்சப்பா, பொன்குமார் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட இணை தலைவர் சர்தார், மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராகவரஜினி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் அழகேசன், இணை பொதுச் செயலாளர் ஜெகதீசன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பிரபு, மாநில துணைத் தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் பொன்.குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்கட்சி தேர்தல்கள் நடந்து வருகிறது.
கிளைத் தேர்தல்கள், ஒன்றியத் தேர்தல்கள் முடிந்து தற்போது மாவட்ட தேர்தல்கள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் மாநில தேர்தல் பொதுக்குழு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நடக்க உள்ளது.
எங்கள் துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், எந்த நலத்திட்ட உதவிகளும் உயர்த்தப்படவில்லை. மாறாக 5 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கேட்பு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது. தற்போது தமிழக முதல்வரின் ஆலோனைப்படி 4 லட்சம் கேட்பு மனுக்கள் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.400 கோடி அளவிற்கு ஓராண்டு காலத்தில் தொழிலாள ர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.