உள்ளூர் செய்திகள்

காவல்துறை சார்பில் தாராபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-02-23 06:27 GMT   |   Update On 2023-02-23 06:27 GMT
  • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக் கை எடுக்கப்படும்
  • காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம் :

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம், மூலனூர்,குண்டடம்,அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையம் சார்பில், மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு முன்னிலையில் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் வெகு நாட்களாக தீர்க்க படாத பிரச்சினைகள், மனுதாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து இருவரிடமும் சமரசம் செய்து வழக்கை உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வசதிக்காக தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், எனது பூர்வீக சொத்தினை எனது 2 மனநலம்பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மருத்துவ செலவுக்கும் பராமரிப்பு செலவிற்கும் பயன்படுத்தி வருகிறேன். அதனை தி.மு.க.வை சேர்ந்த 2பேர் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். பணமும் கொடுக்காமல் பத்திரத்தையும் கொடுக்காமல் மிரட்டி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மூலனூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், குண்டடம் காவல் ஆய்வாளர் முருகாச்சலம், அலங்கியம் காவல் துணை ஆய்வாளர் ஏசுதுரை, தாராபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம் தாராபுரம், குண்டடம்,மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News