உள்ளூர் செய்திகள்
தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பொதுமக்கள் அவதி
- வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்படுகிறது. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் கடைகள் அமைந்துள்ள பக்கவாட்டு பகுதியில் செல்லும் வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.