பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
போடியில் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மறியல் போராட்டம் பொதுமக்கள் பரபரப்பு போஸ்டர்
- போடியில் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்கள் சார்பில் போராட்ட அறிவிப்பு போஸ்டர் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது
மேலசொக்கநாதபும்:
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் ராணிமங்கம்மாள் சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் குடிமகன்கள் எந்தநேரமும் குடித்துவிட்டு சாலையில் அரைகுறை ஆடையுடன் மயங்கி கிடப்பதும், பாட்டில்களை நடைபாதையில் உடைத்துவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரூராட்சி அலுவலகத்திற்கும் புகார் அளித்தனர்.
ஆனால் கடை அகற்றப்படாததால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். எனவே கடைகளை அகற்றாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கரட்டுப்பட்டி பொதுமக்கள் சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.