உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வடமதுரை அருகே டயர்களை எரிப்பதால் கிளம்பும் நச்சுப்புகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Update: 2022-07-03 04:59 GMT
  • வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டி பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
  • டயர்கள் எரிப்பதால் கிளம்பும் புகையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டி பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு டயர்களை எரிப்பதால் நச்சுப்புகை வெளியாவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இதன் காரணமாக ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென்று அனைவரும் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டம் செய்தனர்.

அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News