சின்னார், சாமல்பள்ளம், ஒடையனுர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கப்பட்ட கடைகளையும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் படத்தில் காணலாம்.
ஆபத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலையோரம் வியாபாரம் செய்யும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்
- இந்த ஆபத்தை உணரா–மலும், விபத்துகள் பற்றி தெரியாமலும் ஆபத்தன நிலையில் சாலையோரம் பகுதியில் கடை போட்டு உள்ளனர்.
- சூளகிரி போலீசார் கண்காணித்து மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூளகிரி,
காஷ்மீர் முதல் கன்னியா–குமரி வரையிலான போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, சின்னார் முதல் மேலுமலை வரையிலான 5 கிலா மீட்டர் வரையில் அமைந்துள்ளது.
வியாபாரம்
இந்த தேசிய நெடுஞ்சாலை–யோரங்களில் இருபுறமும் வடமாநிலத்தைச் சேர்ந்த–வர்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து அவர்கள் 4 சக்கர வாகனங்களில் பொம்மைகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றை ஏற்றி கொண்டு தமிழகத்திற்கு வந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் எந்தவித அனுமதி பெறாமலும், சாலை விதிமுறைகளுக்கு மாறாக சூளகிரியை அடுத்துள்ள சின்னார்-மேலுமலை வரையிலான தேசிய நெடுஞ்சாலையோ ரங்களில் வாகனங்களிலும், சாலையோரத்திலும் கடை போட்டு வியாபார பொருட்களான குடை, டேபிள், சேர் மற்றும் விளையாட்டு பொம்ைமகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும் அவர்கள், அந்த வாகனங்களிலேயே சமையல் கியாஸ் வைத்து சமைப்பது சாப்பிடுவதும் குடும்பத்துடன் வாகனத்தி–லேயே இரவில் அங்கே உறங்குவதும், சில மாதங்–களாக செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலையானது. அதிவேக சாலையாக உருவெடுத்து வருகிறது. இந்த சாலையில் மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்கின்றனர். மேலும் இந்த சாலை ஏற்றதாழ்வு சாலை என்பதாலும் பொதுவாக வாரத்திற்கு 4 அல்லது 5 விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாக வருகிறது.
இந்த ஆபத்தை உணரா–மலும், விபத்துகள் பற்றி தெரியாமலும் ஆபத்தன நிலையில் சாலையோரம் பகுதியில் கடை போட்டு உள்ளனர்.
அந்த கடைக–ளில் பொருட்களை வாங்கி செல்வதற்காக சாலை–யிலேயே பொதுமக்கள் வாகனங்–களை நிறுத்தி விட்டு செல்வதாலும் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை சூளகிரி போலீசார் கண்காணித்து மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.