உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் மழைநீர் கசிந்ததால் குடை பிடித்து சென்ற பயணிகள்

Published On 2024-10-16 09:48 IST   |   Update On 2024-10-16 09:48:00 IST
  • காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோட்டிற்கு நேற்று அரசு பஸ் சென்றது.
  • பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், பெண்கள் குடை பிடித்தபடி பஸ்சில் சென்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக நேற்று பகலில் தர்மபுரி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று பகல் நேரத்திலேயே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோட்டிற்கு நேற்று அரசு பஸ் சென்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்றனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பஸ்சின் மேற்கூரையில் இருந்து உள்ளே விழுந்தது. இதன் காரணமாக பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், பெண்கள் குடை பிடித்தபடி பஸ்சில் சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News