உள்ளூர் செய்திகள்

பஸ் டிரைவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் பயணிகள்

Published On 2023-01-18 15:11 IST   |   Update On 2023-01-18 15:11:00 IST
  • பொதுமக்கள் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும்.
  • பயணிகள் புறக்கணிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

குனியமுத்தூர்,

கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிரமாண்டமான நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடையை பயன்படுத்துவது இல்லை. .

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

எத்தனையோ சாலைகளில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று , பஸ்சில் ஏறும் நிலை இருந்து வருகிறது. ஆனால் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மக்கள் நிழற்குடை இருந்தும் அதனை பயன்படுத்துவது இல்லை. பயணிகள் புறக்கணிப்பது ஏன் என்பது தெரியவில்லை. பொதுமக்கள் தான் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

நிழல் குடையில் நிற்காமல் தள்ளி நிற்கும் போது, பஸ் ஓட்டி வரும் டிரைவருக்கு குழப்பம் ஏற்படும். எனவே பொதுமக்கள் விதி மீறல் இல்லாமல் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் செயல்படும் போது எந்த குழப்பமும் ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News