பாஸ்கா திருவிழாவில் இன்று ஏசு கிறிஸ்துவின் திருச்சடல தூம்பா ஊர்வலம் நடைபெற்றது.
மேட்டுப்பட்டியில் பாஸ்கா திருவிழா திருச்சடல தூம்பா ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
- ஏசு சிலுவையில் உயிர்விடும் காட்சியானது பட்டறை சிருபம் என அழைக்கப்படும். பழமையான சிருபத்தை வைத்து இன்றளவும் நடத்தி காட்டப்படுகிறது
- பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் ஏசு கிறிஸ்துவின் உடலை வைத்து ஊர்வலமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 96 கிராமங்களின் தாய் கிரா மமாக விளங்கும் மேட்டு ப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயம் 350 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு அடுத்துவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பாஸ்கா திருவிழா கொண்டாடப்படும்.
அதன்படி நேற்றுஇரவு பாடுகளின் பாஸ்கா நடைபெற்றது. இதில் ஏசுகிறிஸ்துவின் போதனை கள், புதுமைகள், வேதனை கள், சிலுவைப்பாடுகள், கல்வாரி மலையில் உயிர்நீ த்த காட்சிகள் ஆகியவை நடித்து காட்டப்பட்டது. ஏசு சிலுவையில் உயிர்விடும் காட்சியானது பட்டறை சிருபம் என அழைக்கப்படும். பழமையான சிருபத்தை வைத்து இன்றளவும் நடத்தி காட்டப்படுகிறது.
இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு மறித்த ஏசு கிறிஸ்துவின் திருச்சடல தூம்பா ஊர்வலம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் ஏசு கிறிஸ்துவின் உடலை வைத்து நடந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஸ்கா மேடையில் ஏசு கிறிஸ்து கல்லறையில் அடக்கம் செய்யப்படும் நிகழ்வும், திருப்பலியும் நடைபெற்றது. பாஸ்கா நடிகர்கள், உதவியாளர்கள் என 500-க்கும் மேற்ப ட்டோர் இன்றுவரை பழமை மாறாமல் நடத்தி காண்பிக்கப்படும் பாஸ்கா திருவிழாவை இரவு முழுவதும் ஏராளமானோர் கண்டு வழிபட்டனர்.
நாளை உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெறும். மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, நற்கருணை ஆசிர்வழங்கி இதனை தொடங்கி வைக்கிறார். இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு 3 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.