உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் பார்வதி கல்யாணம், மகோஸ்தவம்

Published On 2023-03-23 15:23 IST   |   Update On 2023-03-23 15:23:00 IST
  • ஆஞ்சநேய சாமி கோவிலில் பார்வதி கல்யாணம் மகோத்சவம் நடைபெற்றது.
  • ஆஞ்சநேயர் சாமி மகா கணபதி நாகர்கள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சாமி கோவிலில் பார்வதி கல்யாணம் மகோத்சவம் நடைபெற்றது.

ஆஞ்சநேயர் சாமி மகா கணபதி நாகர்கள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சென்னை குருத்ரேயம் பஜனை மண்டலி குழு வெங்கட கிருஷ்ண பாகவதர் தலைமையில் குரு தியானம் சிவ அஷ்டபதி டோலோத்சவம் உஞ்சவிருத்தி பார்வதி கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் பதிவு மாநில தலைவர் கோவை சிஜி கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல், ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள், தருமபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், அண்ணாமலை ,திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் வைத்தியநாதன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, உள்ளிடட பலரும் பங்கேற்றனர்.

திருக்கல்யாணத்தை ஒட்டி முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்த வரதராஜ பெருமாள் உற்சவம் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  

Tags:    

Similar News