உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி

Published On 2022-12-06 14:20 IST   |   Update On 2022-12-06 14:20:00 IST
  • தி.மு.க. சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
  • வென்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

பாப்பிரெட்டிப்பட்டி.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொ.மல்லாபுரம் பேரூர் கழக தி.மு.க. மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

பொ.மல்லாபுரம் தி.மு.க. நகர செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.சரவணன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத், நகர அவைத்தலைவர் செல்வம், கிளை செயலாளர்கள் பொன்.பரமன், ராஜேந்திரன், நிர்வாகிகள் பிலிப், சந்திரன், ராஜா, ஆசைத்தம்பி, மணி, அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News