உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் ஒட்டப்பட்டுள்ள பேனர்.

பண்ருட்டி நகராட்சி 15 -வது வார்டில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

Published On 2023-11-19 07:02 GMT   |   Update On 2023-11-19 07:02 GMT
  • இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை.
  • வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .

கடலூர்:

பண்ருட்டி நகராட்சி 15-வது வார்டில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, உறையூரான் தெரு, சக்கரபாணி நகர், கடலுார் பழைய மெயின்ரோடு, அப்பர் தெரு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை. தெருவிளக்கு வசதிகளும் இல்லை, கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் சார்பில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.

இதில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமே , வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .ஆனால் 15 வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பால்வாடி பராமரிப்பு இல்லை. கொசுமருந்து அடிப்பது இல்லை. தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க . வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க. இவண் 15-வது வார்டு திருவதிகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News