உள்ளூர் செய்திகள்

முகாமில் மாணவருக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

திருமுல்லைவாசலில், பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-06-25 08:16 GMT   |   Update On 2023-06-25 08:16 GMT
  • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார்.
  • முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

சீர்காழி:

தமிழகம் முழுவதிலும் நூறு இடங்களில் கலைஞரின் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகளின் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி முகாமினை தொடங்கிவைத்தார்.

முகாமில் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார். இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மலர்விழி திருமாவளவன் பங்கேற்றனர். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அஜித்பிரபுகுமார் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News