தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தியாகதுருகத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- தியாகதுருகத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கோயமுத்தூர் மாவட்டத்தில் 84 ஊராட்சி செய லாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்களை மீண்டும் ஏற்கனவே பணிசெய்த இடத்திற்குமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கணேசன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சந்திர சேகர், மாவட்ட இணை செயலாளர் தயாபரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, நிர்வாகி கள் மணிமொழி, லோகேஸ்வரி, அமுதா, பொற்செல்வி, செல்வராஜ், சுதாகர் சீனுவாசன், மாணிக்கம், சங்கீதா, செல்வி வைத்திநாதன், செல்வம், குப்புசாமிஉள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.