உள்ளூர் செய்திகள்
பல்லடம் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
- நலத்திட்ட உதவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம் பல்லடம் மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 65 நபர்களிடமிருந்து பெறப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவை இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம் பல்லடம் மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகள் 36 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது. மேலும் இந்த முகாமில் அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வங்கி கடன் மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 65 நபர்களிடமிருந்து பெறப்பட்டது.
இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன்,ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.