உள்ளூர் செய்திகள்

பழனியாண்டவர், இடும்பன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-03-27 09:49 GMT   |   Update On 2023-03-27 09:49 GMT
  • கோபுர கலசத்திற்கும், பழனியாண்டவர்க்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் நிகழ்ச்சியும், நடைபெற்றது.
  • இதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள குள்ளனூர் கிராமத்தில் பழனியாண்டவர், இடும்பன் மற்றும் உப தெய்வ மஹா கும்பாபிஷேக விழா மற்றும் ஆலய கோபுர அஷ்டபந்தன நூதன குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை அன்று கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் ஆலய கோபுர அஷ்டபந்தன நூதன குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி பூஜை, வழிபாடு நடைபெற்றது.

பிற்பகல் தீர்த்தகுடம் அழைத்தல் நிகழ்ச்சியும், பின்னர் இரவு கோபுர கலசங்கள் வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான இன்று சிவஸ்ரீ சிவசரவண சிவாச்சாரியார் பன்டிதர் இரண்டாம் கால யாக பூஜையும் 108 மூலிகை யாகம் நாடி சந்தனம் மஹாபூர்ணாஹூதி, தீபாதாரணை மற்றும் சன்னதி யாகம் நடைபெற்று காலை 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கும், பழனியாண்டவர்க்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் நிகழ்ச்சியும், நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த மஹா கும்பாபிஷேக விழா மற்றும் ஆலய கோபுர அஷ்டபந்தன நூதன குடமுழுக்கு விழா நிகழ்ச்சிக்கு குள்ளனூர் தாளப்பள்ளம் பங்காளிகள் மற்றும் ஊர் கவுண்டர் கன்ணன் செட்டியார் மாதப்பன் கோல் காரர் மாது உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காலை முதல் பக்தர்கலுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News