உள்ளூர் செய்திகள்

பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்.

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்- பரபரப்பு

Published On 2023-11-03 10:01 GMT   |   Update On 2023-11-03 10:01 GMT
  • 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும்.
  • ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திருவோணம்:

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய விவசாய தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற கூடிய விவசாய தொழிலாளர்கள் ஜாப்காடு வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.

பின்னர், ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.

இதனை யொட்டி ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News