உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் காதுகேளாதோர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-07-02 14:19 IST   |   Update On 2022-07-02 14:19:00 IST
  • காது கேளாதோர் சங்கம் சார்பில் போராட்டம்நடந்தது.
  • கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் 19 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பலராமன், பொருளாளர் கோவர்தனன், மக்கள் தொடர்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொழி பெயர்ப்பாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

இதில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் காது கேளாதோரை அலைக்கழிக்கக்கூடாது. அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்க உடனே முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகை ரூ.1500-ஐ, ரூ.3 ஆயிரமாக உயர்த்தித்தர வேண்டும்.

வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதி நிதிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். கொக்கோகோலா நிறுவனங் களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையைத் தூக்கி சைகையில் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News