புதிய அங்காடி கட்டிடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்.
புதிய பகுதிநேர அங்காடி கட்டிடம் திறப்பு
- 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை வீடுகளுக்கே சென்று அமைச்சர் வழங்கினார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வல்ளூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, 56 நரிக்குறவ பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 215 பயனாளிகளுக்கு இணைய வழிபட்டா, 200 பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
முன்னதாக, வள்ளூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர அங்காடி கட்டிடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை அப்பகுதியிலுள்ள வீடு களுக்கே சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.