உள்ளூர் செய்திகள்

பூங்காவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை திறந்து வைத்த காட்சி.


வடகரை பேரூராட்சியில் சீரமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

Published On 2022-07-28 09:16 GMT   |   Update On 2022-07-28 09:16 GMT
  • வடகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
  • வாவாநகரம் பூங்கா நகரில் பூங்காவில் நடைபாதை, புல்வெளி விளையாட்டு திடல், குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடையநல்லூர்:

வடகரை பேரூராட்சி பகுதியில் 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் பூங்காக்கள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட வாவாநகரம் பூங்கா நகரில் இந்த பூங்காவில் நடைபாதை, புல்வெளி விளையாட்டு திடல், குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்கா சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாலதி ராஜேந்திரன், செயல் அலுவலர் தமிழ்மணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். வடகரை பேரூர் தி.மு.க. செயலாளர் முகம்மது உசேன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வடகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். வடகரை பேரூராட்சி அலுவலகம் சொந்த கட்டிடம் இல்லாததால் பழைய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு துறை சார்ந்த அமைச்சரிடம் பரிந்துரை செய்வதாக கூறினார்.

விழாவில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான், செங்கோட்டை நகரச் செயலாளர் ரஹீம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் செரிப் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News