உள்ளூர் செய்திகள்
ஆன்லைனில் நூதன முறையில் 4 லட்சம் பணம் மோசடி- சைபர் கிரைமில் பெண் புகார்
- ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 779 பணத்தை செலுத்தினார்.
- கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஹேமபிரியா (வயது28).
இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார்.
அப்போது நீங்கள் குறைந்த பணம் செலுத்தினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டது.
உடனே அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 779 பணத்தை செலுத்தினார்.
பின்னர் ஏமாற்றம் அடைந்தது தெரியவரவே கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.